சீவக சிந்தாமணி 1031 - 1035 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1031 - 1035 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1031. பொன் குன்று ஆயினும் பூம் பழனங்கள் சூழ்
நெல் குன்று ஆம் பதி நேரினும் தன்னை யான்
கல் குன்று ஏந்திய தோள் இணை கண் உறீஇச்
சொல் குன்றா புணர்கேன் சொல்லு போ என்றான்

விளக்கவுரை :

1032. சேலை வென்ற கண்ணாட்கு இவை செப்ப அரிது
ஓலை ஒன்று எழுதிப் பணி நீ என
மாலை மார்பன் கொடுப்பத் தினைக் குரல்
ஓலையோடு கொண்டு ஓங்கிப் பறந்ததே

விளக்கவுரை :

[ads-post]

1033. திருந்து கோதைச் சிகழிகைச் சீறடி
மருந்தின் சாயல் மணம் கமழ் மேனியாள்
பொருந்து பூம் பொய்கைப் போர்வையைப் போர்த்து உடன்
கருங் கண் பாவை கவின் பெற வைகினாள்

விளக்கவுரை :

1034. மறம் கொள் வெம் கதிர் வேலவன் வார் கழல்
கறங்க ஏகித் தன் காதலி ஊடலை
உறைந்த ஒண் மலர்ச் சென்னியின் நீக்கினான்
நிறைந்தது இன்ப நெடுங் கணிக்கு என்பவே

விளக்கவுரை :

1035. தன் துணைவி கோட்டியினின் நீங்கித் தனி இடம் பார்த்து
இன் துணைவன் சேர்வான் இருந்தது கொல் போந்தது கொல்
சென்றது கொல் சேர்ந்தது கொல் செவ்வி அறிந்து உருகும்
என் துணைவி மாற்றம் இஃது என்றது கொல் பாவம்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books