சீவக சிந்தாமணி 1026 - 1030 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1026 - 1030 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1026. பணித் தகு கோலமும் பந்தும் பார்ப்புறாள்
மணிக் கழங்கு ஆடலள் மாமை தான் விளர்த்து
அணித் தகை யாழினோடு அமுதம் விட்டு ஒரீஇத்
துணைப் பெரு மலர்க் கணில் துயிலும் நீங்கினாள்

விளக்கவுரை :

1027. திருந்து வேல் சீவக சாமியோ எனும்
கருங் கடல் வெள் வளை கழல்பவோ எனும்
வருந்தினேன் மார்புறப் புல்லு வந்து எனும்
பொருந்து பூங் கொம்பு அன பொருவின் சாயலே

விளக்கவுரை :

[ads-post]

1028. கன்னியர் உற்றநோய் கண் அனார்க்கும் அஃது
இன்னது என்று உரையலர் நாணின் ஆதலான்
மன்னும் யான் உணரலேன் மாதர் உற்ற நோய்
துன்னி நீ அறிதியோ தோன்றல் என்றதே

விளக்கவுரை :

1029. புள்ளின் வாய் உரை கேட்டலும் பொன் செய்வேல்
எள்ளி நீண்ட கண்ணாள் திறத்து இன்னுரை
உள்ளினார் உழைக் கண்டது ஒத்தான் அரோ
வள்ளல் மாத் தடிந்தான் அன்ன மாண்பினான்

விளக்கவுரை :

1030. சொல் மருந்து தந்தாய் சொல்லு நின் மனத்து
என் அமர்ந்தது உரைத்துக் கொள் நீ என
வில் நிமிர்ந்த நின் வீங்கு எழில் தோள் அவட்கு
இன் மருந்து இவை வேண்டுவல் என்றதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books