சீவக சிந்தாமணி 1021 - 1025 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1021 - 1025 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1021. வாழ்க நின் கழல் அடி மைந்த என்னவே
தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு எனச்
சூழ்மணி மோதிரம் சுடர்ந்து வில் இட
யாழ் அறி வித்தகன் அங்கை நீட்டினான்

விளக்கவுரை :

1022. பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம் முலைக்
கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி
முன்னமே வந்து என முறுவல் நோக்கமோடு
என்னை கொல் வரவு என இனிய செப்பினான்

விளக்கவுரை :

[ads-post]

1023. மையல் அம் களிற்றொடு பொருத வண்புகழ்
ஐயனைச் செவ்வி கண்டு அறிந்து வம் எனப்
பை அரவு அல்குல் எம்பாவை தூதொடு
கை இலங்கு எஃகினாய் காண வந்ததே

விளக்கவுரை :

1024. வெஞ்சின வேழம் உண்ட வெள்ளிலின் வெறியம் ஆக
நெஞ்சமும் நிறையும் நீல நெடுங் கணால் கவர்ந்த கள்வி
அஞ்சனத் துவலை ஆடி நடுங்கினாள் நிலைமை என்னை
பைஞ் சிறைத் தத்தை என்னப் பசுங்கிளி மொழியும் அன்றே

விளக்கவுரை :

1025. பூ அணை அழலின் மேல் சேக்கும் பொன் செய் தூண்
பாவை தான் பொருந்துபு நிற்கும் பல் பல்கால்
ஆவியா அழல் என உயிர்க்கும் ஐ என
மேவிப் பூ நிலமிசை இருக்கும் மெல்லவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books