சீவக சிந்தாமணி 1016 - 1020 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1016 - 1020 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1016. முளைத்து எழு மதியம் முத்து அரும்பி யாங்கு என
விளைத்தது திருமுகம் வியர்ப்பு வெம் சிலை
வளைத்தன புருவமும் முரிந்த வல்லையே
கிளைக் கழுநீர்க் கணும் சிவப்பில் கேழ்த்தவே

விளக்கவுரை :

1017. பாவை நீ புலவியில் நீடல் பாவியேற்கு
ஆவி ஒன்று இரண்டு உடம்பு அல்லது ஊற்றுநீர்க்
கூவல் வாய் வெண்மணல் குறுகச் செல்லுமே
மேவிப் பூங் கங்கையுள் விழைந்த அன்னமே

விளக்கவுரை :

[ads-post]

1018. பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவாள்
நேர் மலர்ப் பாவையை நோக்கி நெய் சொரி
கூர் அழல் போல்வது ஓர் புலவி கூர்ந்ததே
ஆர்வுறு கணவன் மாட்டு அமிர்தின் சாயற்கே

விளக்கவுரை :

1019. புலந்தவள் கொடி என நடுங்கிப் பொன் அரிச்
சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னி மேல்
அலங்கல் வாய் அடிமலர் அணிந்து குண்டலம்
இலங்கப் பேர்ந்து இன மலர் சிதறி ஏகினாள்

விளக்கவுரை :

1020. துனிப்பு உறு கிளவியால் துணைவி ஏகலும்
இனிப் பிறர்க்கு இடம் இலை எழுவல் ஈங்கு எனாக்
கனிப்பு உறு சொல் அளைஇப் பறந்து காளை தன்
பனிக் கதிர்ப் பகைமலர்ப் பாதம் சேர்ந்ததே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books