சீவக சிந்தாமணி 1011 - 1015 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1011 - 1015 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1011. கடி கமழ் பூஞ் சிகை காமர் மல்லிகை
வடிவுடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது
நடு ஓசிந்து ஒல்கிய நாறும் மா மலர்க்
கொடியின் மேல் குயில் குனிந்து இருந்தது ஒத்ததே

விளக்கவுரை :

1012. சிலம்பொடு மேகலை மிழற்ற தேனினம்
அலங்கல் உண்டு யாழ் செயும் அம் பொன் பூங்கொடி
நலம்பட நல்நடை கற்றது ஒக்கும் இவ்
இலங்கு அரித் தடங் கணாள் யாவள் ஆம் கொலோ

விளக்கவுரை :


[ads-post]

1013. யாவளே ஆயினும் ஆக மற்று இவள்
மேவிய பொருளொடு மீண்ட பின் அலால்
ஏவலால் சேர்கலேன் என்று பைங்கிளி
பூ அலர் சண்பகம் பொருந்திற்று என்பவே

விளக்கவுரை :

1014. மதுக் களி நெடுங் கணாள் வான் பொன் கிண்கிணி
ஒதுககிடை மிழற்றச் சென்று எய்தி ஊன் கவர்
கதக் களி வேலினான் கண்டு காமநீர்ப்
புதுத் தளிர் அனையவள் புலந்து நோக்கினாள்

விளக்கவுரை :

1015. இது என உருஎன இயக்கி என்றலும்
புதிது இது பூந் துகில் குழல்கள் சோர்தலால்
மது விரி கோதை அம் மாலை நின்மனம்
அது முறை இயக்கலின் இயக்கி ஆகுமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books