சீவக சிந்தாமணி 1006 - 1010 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1006 - 1010 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1006. மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு
இன்னணம் இறைமகன் புலம்ப யாவதும்
தன் அணங்கு உறு மொழித் தத்தை தத்தையை
மன் அணங்கு உறலொடு மகிழ்ந்து கண்டதே

விளக்கவுரை :

1007. ஆடும் பாம்பு எனப் புடை அகன்ற அல்குல் மேல்
சூடிய கலைப்புறம் சூழ்ந்த பூந்துகில்
ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை
கூடி மற்று அதன் புறம் குலாய கொள்கைத்தே

விளக்கவுரை :


[ads-post]

1008. கொன்வளர் குவிமுலைக் கோட்டில் தாழ்ந்தன
மின் வளர் திரள் வடம் விளங்கு பைங்கதிர்
இன் வளர் இளம் பிறை எழுதப் பட்டன
பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே

விளக்கவுரை :

1009. குண்டலம் ஒரு புடை குலாவி வில்லிட
விண்டு அலர்ந்து ஒருபுடை தோடு மின்செய்
மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே
ஒண் தொடி திருமுகத்து உருவ மாட்சியே

விளக்கவுரை :

1010. பூண் நிறம் முலையவள் பொருவில் பூ நுதல்
மாண் நிறக் கருங்குழல் மருங்கில் போக்கிய
நாள் நிறம் மிகுகதிர்ப் பட்டம் நல் ஒளி
வாள் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books