சீவக சிந்தாமணி 1001 - 1005 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1001 - 1005 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1001. தெளி கயம் அம் மலர் மேல் உறை தேவியின்
ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள்
களிகொள் காமத்தில் கையறவு எய்தித் தன்
கிளியைத் தூது விட்டான் கிளந்து என்பவே

விளக்கவுரை :

1002. பூணொடு ஏந்திய வெம் முலைப் பொன் அனாள்
நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட
வீணை வித்தகன் காணிய விண்படர்ந்து
ஆணுப் பைங்கிளி ஆண்டுப் பறந்ததே

விளக்கவுரை :




[ads-post]

1003. கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன்
தீட்டினான் கிழிமிசைத் திக வாள்நுதல்
வேட்ட மால் களிற்று இடை வெருவி நின்றது ஓர்
நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே

விளக்கவுரை :

1004. நெகிழ்ந்து சோர் பூந்துகில் நோக்கி நோக்கியே
மகிழ்ந்து வீழ் மணிக் குழல் மாலை கால் தொடும்
முகிழ்ந்து வீங்கு இள முலை முத்தம் தைவரும்
புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே

விளக்கவுரை :

1005. படை மலர் நெடுங் கணாள் பரவை ஏந்து அல்குல்
மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில்
புடை திரள் வன முலைப் பூணும் நோற்றன
அடிமலர்த் தாமரைச் சிலம்பு நோற்றவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books