சீவக சிந்தாமணி 996 - 1000 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 996 - 1000 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

996. பூமியும் பொறை ஆற்ற அருந் தன்மையால்
வேம் என் நெஞ்சமும் வேள்வி முளரி போல்
தாம மார்பனைச் சீவகச் சாமியைக்
காமனைக் கடிதே தம்மின் தேவிர்காள்

விளக்கவுரை :

997. கையினால் சொலக் கண்களின் கேட்டிடும்
மொய்கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேன்
செய்தவம் புரியாச் சிறியார்கள் போல்
உய்யல் ஆவது ஓர் வாயில் உண்டாம் கொலோ

விளக்கவுரை :

[ads-post]

998. கண்ணும் வாள் அற்ற கைவளை சோருமால்
புண்ணும் போன்று புலம்பும் என் நெஞ்சு அரோ
எண் இல் காமம் எரிப்பினும் மேல் செலாப்
பெண்ணின் மிக்கது பெண் அலது இல்லையே

விளக்கவுரை :

999. சோலை வேய் மருள் சூழ் வளைத் தோளி தன்
வேலை மாக் கடல் வேட்கை மிக்கு ஊர்தர
ஓலை தாழ் பெண்ணை மா மடல் ஊர்தலைக்
கால வேல் தடங் கண்ணி கருதினாள்

விளக்கவுரை :

1000. உய்யுமாறு உரை உன்னை அல்லால் இலேன்
செய்ய வாய்க் கிளியே சிறந்தாய் என
நையல் நங்கை இந் நாட்டு அகத்து உண்டு எனில்
தையலாய் சமழாது உரை என்றதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books