சீவக சிந்தாமணி 896 - 900 of 3145 பாடல்கள்
896. நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇக்
கோலம் ஆக எழுதிய போல் குலாய்
ஞாலம் விற்கும் புருவத்து நங்கை கண்
போலும் வேலவனே புகழ்ந்தேன் என்றாள்
விளக்கவுரை :
897. சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல் தன்னை
வேல் ஐயம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி
மாலைக்கு வென்றி கூற மழை இடிப்புண்டு ஓர் நாகம்
ஆலையத்து அழுங்கி ஆங்கு மஞ்சரி அவலம் உற்றாள்
விளக்கவுரை :
[ads-post]
898. திங்கள் அம் கதிர் செற்று உழக்கப்பட்ட
பங்கயப் படு ஒத்து உளை பாவாய்
நங்கை என்னொடு உரையாய் நனி ஒல்லே
இங்கண் என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள்
விளக்கவுரை :
899. மாற்றம் ஒன்று உரையாள் மழை வள்ளல் என்
ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல்
தோற்று வந்து என் சிலம்பு அடி கை தொழ
நோற்பல் நோற்றனை நீ என ஏகினாள்
விளக்கவுரை :
900. கன்னி மாநகர் கன்னியர் சூழ் தரக்
கன்னி மாடம் அடையக் கடி மலர்க்
கன்னி நீலக் கண் கன்னி நற்றாய்க்கு அவள்
கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 896 - 900 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books