சீவக சிந்தாமணி 751 - 755 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 751 - 755 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

751. இள வள நாகு புல்லி இனத்து இடை ஏறு நின்றால்
உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருது உடையது ஆமே
தள வள முகை கொள் பல்லாள் சீவகன் தழுவி நின்றால்
கொள உளைந்து எழுவது அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ

விளக்கவுரை :

752. எழுந்து விண் படரும் சிங்கம் பெட்டைமேல் இவர்ந்து நின்றால்
மழுங்க மேல் சென்று பாய்தல் மறப்புலி தனக்கும் ஆமோ
கொழுங் கயல் கண்ணினாளைச் சீவக குமரன் சூழ்ந்தால்
அழுங்கச் சென்று அணைதல் பேய்காள் அநங்கற்கும் ஆவது உண்டோ

விளக்கவுரை :

[ads-post]

753. மத்திரிப்பு உடைய நாகம் வாய் வழி கடாத்தது ஆகி
உத்தமப் பிடிக்கண் நின்றால் உடற்றுதல் களபக்கு ஆமே
பத்தினிப் பாவை நம்பி சீவகன் பாலள் ஆனால்
அத்திறம் கருதி ஊக்கல் அரசிர்காள் நுங்கட்கு ஆமோ

விளக்கவுரை :


754. தூமத்தால் கெழீஇய கோதை தோள் துணை பிரித்தல் விண்மேல்
தாமத்தால் கெழீஇய மார்பன் இந்திரன் தனக்கும் ஆகாது
ஏம் உற்றீர் இன்னும் கேண்மின் இரதியைப் புணர்தும் என்று
காமத்தால் கெழுமினார்க்குக் காமனில் பிரிக்கல் ஆமே

விளக்கவுரை :


755. எம்மை நீர் வெல்லப் பெற்றீர் வென்றபின் இருந்த வேந்தன்
நும்மையும் வேறு செய்து நும் உளே பொருது வீந்தால்
வெம்மை செய்து உலகம் எல்லாம் ஆண்டிட விளைக்கும் நீதி
அம்ம மற்று அதனை ஓரீர் அவன் கருத்து அன்னது என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books