சீவக சிந்தாமணி 726 - 730 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 726 - 730 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

726. வானம் மீன் அரும்பி மலர்ந்து
கானம் பூத்த கார் என்கோ யான்
கானம் பூத்த கார் கண்டு அழுங்கும்
தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான்

விளக்கவுரை :


727. அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணிவிரல் தவழ்ந்த வாறும்
பண்ணிய இலயம் பற்றிப் பாடிய வனப்பும் நோக்கி
விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்
மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார்

விளக்கவுரை :

[ads-post]

728. வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை
சூழ் மணிக் கோட்டு வீணைச் சுகிர் புரி நரம்பு நம்பி
ஊழ் மணி மிடறும் ஒன்றய்ப் பணி செய்தவாறு நோக்கித்
தாழ் மணித் தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே

விளக்கவுரை :


729. விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த
மண்ணவர் மகிழ வான் கண் பறவை மெய்ம் மறந்து சோர
அண்ணல்தான் அனங்கன் நாணப் பாடினான் அரசர் எல்லாம்
பண் அமைத்து எழுதப் பட்ட பாவை போல் ஆயினாரே

விளக்கவுரை :


730. பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும்
திருந்து தார்ச் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி
விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான்
இருந்தாள் இளம் மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books