சீவக சிந்தாமணி 926 - 930 of 3145 பாடல்கள்
926. திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான்
குருதித் துகிலின் உறையைக் கொழும் பொன் விரலின் நீக்கி
அரவம் முற்றும் விழுங்கி உமிழும் பொழுதின் மதி போன்று
உருவத் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே
விளக்கவுரை :
927. பலகை செம்பொன் ஆகப் பளிங்கு நாயாப் பரப்பி
அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருளக்
குலவும் பவழ உழக்கில் கோதை புரளப் பாடி
இலவம் போது ஏர் செவ்வாய் இளையோர் பொருவார்க் காண்மின்
விளக்கவுரை :
[ads-post]
928. தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணப் புழுக்கல்
ஆம் பால் அக்காரடலை அண்பல் நீர் ஊறு அமிர்தம்
தாம் பாலவரை நாடித் தந்து ஊட்டு அயர்வார் சொரிய
ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின்
விளக்கவுரை :
929. அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யின்
கள் செய் கடலுள் இளமைக் கூம்பின் கடி செய் மாலை
துள்ளு தூமக் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம்
உள்ளு காற்றா உழலும் காமக் கலனும் காண்மின்
விளக்கவுரை :
930. தாய் தன் கையின் மெல்லத் தண் என் குறங்கின் எறிய
ஆய் பொன் அமளித் துஞ்சும் அணி ஆர் குழவி போலத்
தோயும் திரைகள் அலைப்பத் தோடு ஆர் கமலப் பள்ளி
மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 926 - 930 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books