சீவக சிந்தாமணி 776 - 780 of 3145 பாடல்கள்
776. குடை உடை வேந்து எனும் குழாம் கொள் நாகமும்
கொடி எனும் பிடி உடைக் குமர வேழமும்
வெடிபடு போர்த் தொழில் காண விஞ்சையர்
இடி உடை இன மழை நெற்றி ஏறினார்
விளக்கவுரை :
777. கரை பொரு கடலொடு கார் கண் உற்று என
முரைசொடு வரி வளை முழங்கி ஆர்த்தன
அரைசரும் அமர் மலைந்து அரணம் வீசினார்
குரை கடல் தானை போர்க் கோலம் செய்தவே
விளக்கவுரை :
[ads-post]
778. தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுள் இட்டு
எய் கணைப் படுமழை சிதறி எங்கணும்
மொய் அமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச்
செய் கழல் சீவகன் வாழ்க என்னவே
விளக்கவுரை :
779. கலந்தது பெரும் படை கணை பெய் மாரி தூய்
இலங்கின வாள் குழாம் இவுளி ஏற்றன
விலங்கின தேர்த்தொகை வேழம் காய்ந்தன
சிலம்பின இய மரம் தெழித்த சங்கமே
விளக்கவுரை :
780. சுற்று அணி கொடும் சிலை மேகம் தூவிய
முற்று அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின்
அற்று வீழ் குழை முகம் அலர்ந்த தாமரை
மற்று அவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 776 - 780 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books