சீவக சிந்தாமணி 756 - 760 of 3145 பாடல்கள்
756. சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்மின் எங்கள்
வில் திறல் என்று வில் வாய் வெம் கணை தொடுத்து வாங்கிக்
கல் திரள் கழிந்து மண்ணுள் கரந்து அது குளிப்ப எய்திட்டு
இற்று எமர் கல்வி என்றான் இடி உருமேற்றொடு ஒப்பான்
விளக்கவுரை :
757. ஆழி அம் கழனி தன்னுள் அம்பொடு கணையம் வித்திச்
சூழ் குடர்ப் பிணங்கள் மல்க விளைத்த பின் தொழுதிப் பல்பேய்க்கு
ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சிச் சோறு ஊட்டி வென்றி
வீழ்தர வேட்டு நின்றார் எய்துப வெகுளல் வேண்டா
விளக்கவுரை :
[ads-post]
758. போர்ப் பறை முழங்கி எங்கும் பொருவளி புடைக்கப் பட்ட
கார்க் கடல் போன்று சேனை கலக்கமோடு உரறி ஆர்ப்பத்
தார் பொலி மார்பன் ஓர்த்துத் தன் கையில் வீணை நீக்கி
வார் பொலி முலையினாட்கு வாய் திறந்து இதனைச் சொன்னான்
விளக்கவுரை :
759. தேய்ந்து நுண் இடை நைந்து உகச் செப்பினைக்
காய்ந்த வெம் முலையாய் நின கண்கள்போல்
ஆய்ந்த அம்பினுக்கு ஆர் இரை ஆகிய
வேந்தர் வேண்டி நின்றார் விம்மல் நீ என்றான்
விளக்கவுரை :
760. அண்ணல் கூறலும் அம்மனையோ எனாத்
துண் என் நெஞ்சினளாய்த் துடித்து ஆய் இழை
கண்ணின் நீர் முலை பாயக் கலங்கினாள்
வண்ண மாக் கவின் சொல்லொடு மாய்ந்ததே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 756 - 760 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books