சீவக சிந்தாமணி 856 - 860 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 856 - 860 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

856. முழவம் கண் துயிலாத முது நகர்
விழவு நீர் விளையாட்டு விருப்பினால்
தொழுவில் தோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூது எயில் போல் கிளர்வுற்றதே

விளக்கவுரை :

857. வள்ள நீர் அரமங்கையர் அங் கையால்
உள்ளம் கூரத் திமிர்ந்து உகுத்து இட்ட சாந்து
அள்ளலாய் அடி யானை இழுக்கின
வெள்ள நீர் வளை வெள்ளம் முரன்றவே

விளக்கவுரை :


[ads-post]

858. நீந்தும் நித்தில ஊர்தி நிழல் மருப்பு
ஏந்து கஞ்சிகை வையம் இள வெயில்
போந்து காய் பொன் சிவிகை நல் போதகம்
கூந்தல் மாலைக் குமரிப் பிடிக் குழாம்

விளக்கவுரை :


859. ஏறுவார் ஒலி ஏற்றுமினோ எனக்
கூறுவார் ஒலி தோடு குலைந்து வீழ்ந்து
ஆறின் ஆர்ப்பு ஒலி அம் சிலம்பின் ஒலி
மாறு கொண்டது ஓர் மாக் கடல் ஒத்தவே

விளக்கவுரை :

860. பொன் செய் வேய்த்தலைப் பூ மரு மண்டலம்
மின் செய் வெண் குடை பிச்சம் மிடைந்து ஒளி
என் செய்கோ என்று இரிந்தது இழை நிலா
மன் செய் மாண் நகர் வட்டம் விட்டிட்டதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books