சீவக சிந்தாமணி 716 - 720 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 716 - 720 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

716. தடங் கணாள் பணியினால் தான் அவ்வீணை ஒன்றினை
நெடுங் கணால் எழினியை நீக்கி உய்த்து நீட்டினாள்
மடங்கல் அன்ன மொய்ம்பினான் வருக என்று கொண்டு தன்
கிடந்த ஞானத்து எல்லையைக் கிளக்கல் உற்று நோக்கினான்

விளக்கவுரை :

717. சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல்
பரந்த கேள்வித் துறை போய பைந்தார் மார்பன் பசும்பொன் யாழ்
நரம்பு தேன் ஆர்த்து எனத் தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை
இருந்த முலையாள் நின்றாளை நோக்கி இசையின் இது சொன்னான்

விளக்கவுரை :


[ads-post]

718. நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இதுபோக
வார் நின்று இளகும் முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க
ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒண் பொன் உகு கொடியே
சீர்சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான்

விளக்கவுரை :

719. கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காமத் தீயால் வெந்தவர்போல்
கொல்லை உழவர் சுடப் பட்டுக் குரங்கி வெந்தது இது களிறு
புல்ல முரிந்தது எனப் போக்கித் தூமம் ஆர்ந்த துகில் உறையுள்
நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான்

விளக்கவுரை :

720. இரு நில மடந்தை ஈன்றது இருவிசும்பு என்னும் கைத்தாய்
திருநலம் மின்னுப் பொன் ஞாண் முகில் முலை மாரித் தீம்பால்
ஒருநலம் கவின் ஊட்ட உண்டு நோய் நான்கும் நீங்கி
அருநலம் கவினி வாள்வாய் அரிந்து இது வந்தது என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books