சீவக சிந்தாமணி 766 - 770 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 766 - 770 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

766. பதுமுக குமரன் மற்று இப் பாவையைக் காவல் ஓம்பி
மதுமுக மாலை நெற்றி மதகளிறு உந்தி நிற்ப
நுதிமுக வாளும் வில்லும் நுண் இலை வேலும் ஏந்திச்
சதுமுகம் ஆகச் சேனை நமர் தலைப் பெய்க என்றான்

விளக்கவுரை :

767. வட்டு உடை மருங்குல் சேர்த்தி வாள் இரு புடையும் வீக்கித்
தட்டு உடைப் பொலிந்த திண் தேர் தனஞ்சயன் போல ஏறிக்
கட்டளைப் புரவி சூழ்ந்து கால் புடை காப்ப ஏவி
அட்டு உயிர் பருகும் கூற்றம் கோள் எழுந்த அனையது ஒத்தான்

விளக்கவுரை :


[ads-post]

768. புள் இரைப்பு அன்ன பொன் தார்ப் புரவித் தேர் இரவி போலா
உள் உறுத்து எழுந்து பொங்கி உடல் சினம் கடவ நோக்கி
முள் எயிறு இலங்க நக்கு முடிக் குழாம் மன்னர் கேட்பக்
கள் அவிழ் அலங்கல் மார்பன் கார் மழை முழக்கின் சொன்னான்

விளக்கவுரை :

769. முருகு உலா முல்லை மாலை மூப்பு இலா முலையினார் நும்
அருகு உலாம் புலவி நோக்கத்து அமிர்தம் இன்று உகுப்ப கொல்லோ
கருதலாம் படியது அன்றிக் கலதி அம்பு இவையும் காய்ந்த
பொருது உலாம் புகழை வேட்டு இவ் எஃகமும் புகைந்த என்றான்

விளக்கவுரை :

770. வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால்
ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் நெஞ்சத்து
ஏண் இகந்து இலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார்
சேண் இகந்து உய்யப் போ நின் செறிதொடி ஒழிய என்றார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books