சீவக சிந்தாமணி 876 - 880 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 876 - 880 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

876. சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு சோர் குழல்
வண்ண மாலை நுசுப்பு வருத்துவான்
எண்ணி வந்தன கூறு இவையோ என
நண்ணி மாலையை நக்கனள் என்பவே

விளக்கவுரை :

877. பைம் பொன் நீள் உலகு அன்றிப் இப்பார்மிசை
இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள எனில்
செம் பொன் பாவை அன்னாய் செப்பு நீ எனக்
கொம்பனாளும் கொதித்துக் கூறினாள்

விளக்கவுரை :

[ads-post]

878. சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம்
எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என
வண்ண வார் குழல் ஏழையர் தம்முளே
கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே

விளக்கவுரை :

879. மல்லிகை மாலை மணம் கமழ் வார்குழல்
கொல்லியல் வேல் நெடுங் கண்ணியர் கூடிச்
சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள்
வெல்வது சூது என வேண்டி விடுத்தார்

விளக்கவுரை :

880. இட்டிடையார் இரு மங்கையர் ஏந்து பொன்
தட்டு இடை அம்துகில் மூடி அதன் பினர்
நெட்டு இடை நீந்துபு சென்றனர் தாமரை
மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books