சீவக சிந்தாமணி 951 - 955 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 951 - 955 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

951. கற்ற ஐம் பதங்கள் நீராக் கருவினை கழுவப் பட்டு
மற்று அவன் தேவன் ஆகி வான் இடு சிலையின் தோன்றி
இற்ற தன் உடம்பும் இன்னா இடர் ஒழித்து இனியன் ஆகி
உற்றவன் நிலையும் எல்லாம் ஓதியின் உணர்ந்து கண்டான்

விளக்கவுரை :

952. இரும்பின் நீர்மை கெடுத்து எரி தன் நிறத்து
அரும் பொன் ஆக்கிய ஆர் உயிர்த் தோழனை
விரும்பி விண் இறுத்து ஒய் எனத் தோன்றினான்
சுரும்பு உண் கண்ணிச் சுதஞ்சணன் என்பவே

விளக்கவுரை :

[ads-post]

953. ஓசனை நறும் புகை கமழ் ஒண்ணிலா
வீசிய கதிர் பரந்து இமைக்கும் மேனியன்
மாசு அறு மணிமுடி மிடைந்த மாலையன்
பூசு உறு பருதியில் பொலிந்து தோன்றினான்

விளக்கவுரை :

954. குன்று எனத் திரண்ட தோளான் குறுகலும் குமரன் நோக்கி
நின்றவன் நெடுங் கண் ஒன்றும் இமைப்பு இல நிழல் இல் யாக்கை
அன்றியும் கண்ணி வாடாது அமரனே என்று தேறி
நன்று அவன் வரவு கேட்பான் நம்பி நீ யாரை என்றான்

விளக்கவுரை :

955. குங்குமக் குவட்டின் வீங்கிக் கோலம் வீற்று இருந்த தோளாய்
இங்கு நின் அருளில் போகி இயக்கருள் இறைவன் ஆகிச்
சங்க வெண் மலையின் மற்றுச் சந்திர உதயத்தின் உச்சி
அங்கு யான் உறைவல் எந்தை அறிக மற்று என்று சொன்னான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books