சீவக சிந்தாமணி 891 - 895 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 891 - 895 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

891. காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி
போவர் பொன் அனையாய் எனக் கை தொழுது
ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள்
கோவை நித்திலம் மென் முலைக் கொம்பு அனாள்

விளக்கவுரை :

892. மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று
எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்
வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது
உண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள்

விளக்கவுரை :


[ads-post]

893. சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும்
மாலை என்னும் மடமயில் சுண்ணமும்
சால நல்லன தம்முளும் மிக்கன
கோலம் ஆகக் கொண்டு உண்மின் எனச் சொன்னான்

விளக்கவுரை :

894. வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை
விண்ணில் தூவி இட்டான் வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ணம் வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே

விளக்கவுரை :

895. தத்தும் நீர்ப் பவளத்து உறை நித்திலம்
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர்
ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு
உய்த்து உரைமின் இவ்வண்ணம் எனச் சொன்னான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books