சீவக சிந்தாமணி 791 - 795 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 791 - 795 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

791. பொன் அனாள் புணர் முலைப் போகம் வேண்டிய
மன்னரோடு இளையவர் மறலி வாள் அமர்
இன்னணம் இத்தலை மயங்க அத்தலைக்
கொல் நவில் வேலினான் நிலைமை கூறுவாம்

விளக்கவுரை :


792. தம்பியைச் சீவகன் நோக்கிச் சாமரை
வெம் பரி மான் செவி வீரமந்திரம்
இம்பர் நம் இடர் கெட இரண்டும் வல்லையாய்
நம்பி நீ மொழிக என நயந்து கூறினான்

விளக்கவுரை :


[ads-post]

793. மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டிப் புகுவவே போல்
அந்தரத்து இவர்ந்த ஆழிக் கால் நிலம் விட்ட மாலைச்
சுந்தரச் சுண்ண மேனி மகளிர்தம் கண்ணுள் இட்ட
மைந்தரும் இரும்பும் ஒவ்வா வான் புலம் காவல் கொண்டார்

விளக்கவுரை :

794. வடி கயிறு ஆய்ந்து முள்கோல் வலக் கையால் தாங்கி வென்றி
முடிகெனப் புரவி முள்ளால் உறுத்தினான் மொழிதல் தேற்றேன்
கடுகிய வண்ணம் மாவின் தாரொலி காமர் பொன்தேர்
படையது செவியும் கண்ணும் பற்றி நின்றிட்ட அன்றே

விளக்கவுரை :

795. அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார்
மண்ணதே வான் அது என்பார் மனத்ததே முகத்தது என்பார்
கண்ணதே செவி அது என்பார் கலங்க நூல் கழிய நோக்கிப்
பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books