சீவக சிந்தாமணி 971 - 975 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 971 - 975 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani


971. கத்தி கைக் கண்ணி நெற்றிக் கை தொழு கடவுள் அன்ன
வித்தக இளையர் எல்லாம் விழுமணிக் கலங்கள் தாங்கி
முத்து அணிந்து ஆவி ஊட்டி முகிழ் முலை கச்சின் வீக்கிப்
பித்திகை பிணையல் சூழ்ந்து பெண் கொடி பொலிந்த அன்றே

விளக்கவுரை :

972. திருந்து பொன் தேரும் செம் பொன் சிவிகையும் மிடைந்து தெற்றிக்
கருங் கயக் களிறும் மாவும் கால் இயல் பிடியும் ஈண்டி
நெருங்குபு மள்ளர் தொக்கு நெடுவரைத் தொடுத்த வெள்ளம்
கருங் கடற்கு இவர்ந்த வண்ணம் கடிநகர்க்கு எழுந்த அன்றே

விளக்கவுரை :


[ads-post]

973. கடல் எனக் காற்று எனக் கடுங் கண் கூற்று என
உடல் சின உரும் என ஊழித் தீ எனத்
தொடர் பிணி வெளில் முதல் முருக்கித் தோன்றியது
அடல் அருங் கடாக் களிற்று அசனி வேகமே

விளக்கவுரை :


974. பொருது இழி அருவி போன்று பொழி தரு கடாத்தது ஆகிக்
குருதி கொள் மருப்பிற்று ஆகிக் குஞ்சரம் சிதைந்தது என்னக்
கருதிய திசைகள் எல்லாம் கண்மிசைக் கரந்த மாந்தர்
பருதியின் முன்னர்த் தோன்றா மறைந்த பல் மீன்கள் ஒத்தார்

விளக்கவுரை :

975. கருந்தடங் கண்ணி தன்மேல் காமுகர் உள்ளம் போல
இருங் களிறு எய்த ஓடச் சிவிகை விட்டு இளையர் ஏக
அரும் பெறல் அவட்குத் தோழி ஆடவர் இல்லையோ என்று
ஒருங்கு கை உச்சிக் கூப்பிக் களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books