சீவக சிந்தாமணி 761 - 765 of 3145 பாடல்கள்
761. மேவி நம்பிக்கு வெம் பகை ஆக்கிய
பாவியேன் உயிர் பாழ் உடல் பற்று விட்டு
ஆவியோ நடவாய் என்று அழுது தன்
காவி வாள் கண் கலங்க அதுக்கினாள்
விளக்கவுரை :
762. பாழி நம் படை மேல் அது இப் பார் எலாம்
நூழில் ஆட்டி நுடக்கிக் குடித்திடும்
வாழி நங்கை கண்டாய் என்று வாள் கண் நீர்
தோழி தூத்துகில் தோகையின் நீக்கினாள்
விளக்கவுரை :
[ads-post]
763. எங்கள் பெண்மையும் ஈர்மலர்த் தார் மன்னர்
தங்கள் ஆண்மையும் சால்வது காண்டும் என்று
இங்கு வார் முரலும் கலை ஏந்து அல்குல்
நங்கை வாள் படை நங்கையைச் சூழ்ந்ததே
விளக்கவுரை :
764. கூன்களும் குறளும் அஞ்சிக்குடர் வெந்து கொழும் பொன் பேழை
தான் கொளப் பாய ஓடிச்சாந்துக் கோய் புகிய செல்வ
தேன் கொள் பூமாலை சூடித்தாமம் ஆய்த் திரண்டு நிற்ப
வான் பளிங்கு உருவத் தூணே மறைபவும் ஆய அன்றே
விளக்கவுரை :
765. இங்கித நிலைமை நோக்கி முறுவலித்து எரிபொன் மார்பன்
நங்கையைக் காக்கும் வண்ணம் நகா நின்று மொழிந்து பேழ்வாய்ச்
சிங்கம் தான் கடியது ஆங்கு ஓர் செழும் சிங்க முழக்கின் சீறிப்
பொங்கி மேல் செல்வதே போல் பொலங் கழல் நரலச் சென்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 761 - 765 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books