சீவக சிந்தாமணி 826 - 830 of 3145 பாடல்கள்
826. மரகத மணிப் பசும் காய் கொள்வான் குலை
கவர் பழுக் காய்க் குலை கனியக் கா உறீஇ
இவர் தரு மெல் இலைக் காவும் ஏந்திய
உவரியாய்ச் சொரிந்து இடம் பெறாது தான் ஓர் பால்
விளக்கவுரை :
827. சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை
தண் கழுநீரொடு குவளை தாமரை
வண்டு இனம் மிசை கொள வாசப் பூச் சுமை
கொண்டவர் குழாம் பொலிவு உற்றது ஆங்கு ஓர் பால்
விளக்கவுரை :
[ads-post]
828. ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன்
சீர் கெழு வள மனை திளைத்து மாசனம்
கார் கெழு கடல் எனக் கலந்த அல்லதூஉம்
பார் கெழு பழுமரப் பறவை ஒத்தவே
விளக்கவுரை :
829. கை உறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து
ஐ என இருப்ப மற்றன்னது ஆதலான்
வையக மருங்கினில் வாழ்நர் மற்று இவன்
செய் தவம் நமக்கு இசைக என்னச் சென்றதே
விளக்கவுரை :
830. வால் அரி கழுவிய வண்ணச் செம்புனல்
கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து அவண்
கோல நீர்க் குவளையும் மரையும் பூத்து வண்டு
ஆலி இவண் குருகு பாய் தடங்கள் ஆனவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 826 - 830 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books