சீவக சிந்தாமணி 801 - 805 of 3145 பாடல்கள்
801. ஆர்ப்பு எதிர் மாரி பெய்யும் அணி நெடுங் குன்றம் போலப்
போர்க்கு எதிர்ந்தவரும் ஆர்த்தார் ஆர்த்தலும் பூண்ட வல்வில்
கார்க்கு எதிர் மேகம் போலக் கணைமழை கான்றது இப்பால்
ஈர்த்தது குருதி வெள்ளம் இறைச்சிக் குன்று ஆக்கினானே
விளக்கவுரை :
802. மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப் படை அழுவ மாரி
கொல் நுனை எஃகின் நீக்கிக் குனிந்துவில் பகழி கான்ற
மின் அவிர் இலங்கும் ஒள்வாள் விழித்து உயிர் விழுங்க இன்ன
தன்மையால் தானை நீந்தித் தான் விளையாடு கின்றான்
விளக்கவுரை :
[ads-post]
803. வேழ வெண் கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால்
ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின்
சூழ் குடர்க் கண்ணி சூடி நிணத் துகில் உடுத்து வெள் என்பு
ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆடக் கண்டு உவந்து நக்கான்
விளக்கவுரை :
804. வெளிற்று உடல் குருதி வெள்ள நிலை இது என்பவே போல்
களிற்று உகிர்ப் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சிக் கூப்பி
அளித்தவை பாடி ஆடக் குறு நரி நக்கு வேழம்
விளித்தன கழுகும் பாறும் விலா இற்றுக் கிடந்த அன்றே
விளக்கவுரை :
805. கடல் விளை அமுதம் கண்ட பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று
அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கு அண்ணல் அம் குமரன் ஒன்னார்
உடலின் மேல் திரியும் திண்தேர் காண்டலும் மைந்தர் நெஞ்சத்
திடல் பிளந்து இட்ட எஃகம் சுமந்து அமர்த் திறத்தின் மிக்கார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 801 - 805 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books