சீவக சிந்தாமணி 821 - 825 of 3145 பாடல்கள்
821. செய்த அப் பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம்
எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி
மை அறு மணியின் செய்த வலம்புரி அதன் நீர் கொண்டான்
வையகம் அளிக்க நீண்ட வலம்புரித் தடக்கை யானே
விளக்கவுரை :
822. கருமணி அழுத்திய காமர் செங் கதிர்த்
திருமணிச் செப்பு எனச் செறிந்த வெம் முலை
அருமணி அலம் வரும் அம்பொன் கொம்பு அனாள்
பெரு மணக் கிழமை யாம் பேசுகின்றதே
விளக்கவுரை :
[ads-post]
823. நான்கு நூறு ஆயிரம் குடத்து நல்லன
ஆன் தயிர் பால் நெயொடு அழகிதா நிறைத்து
ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர்மருள்
கோன் தொறுக் காவலன் கொண்டு முன்னினான்
விளக்கவுரை :
824. வளை நிற வார் செந் நெல் அரிசிப் பண்டியோடு
அளவு அறு சருக்கரைப் பண்டி ஆர்ந்தன
பிளவு இயல் பயறு பெய் பண்டி உப்பு நீர்
விளைவு அமை பண்டியின் வெறுத்தது ஆங்கு ஓர் பால்
விளக்கவுரை :
825. சினைத் துணர் முழவு அன பலவின் தீம் கனி
கனைத்து வண்டு உழல்வன வாழை மாங் கனி
எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய
சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஓர் பால்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 821 - 825 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books