சீவக சிந்தாமணி 936 - 940 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 936 - 940 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

936. வேள்வியில் உண்டி விலக்கிய நீவிர்கள்
ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார்
தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை
நீள் கயம் பாய்ந்து அது நீந்துத லோடும்

விளக்கவுரை :

937. மண் குடம் அல்லன மதியின் வெள்ளிய
கள் குடக் கன்னியர் இருவரோடு உடன்
துட்கென யாவரும் நடுங்கத் தூய்மை இல்
உட்கு உடைக் களி மகன் ஒருவன் தோன்றினான்

விளக்கவுரை :

[ads-post]

938. தோன்றிய புண் செய் வேலவற்குத் தூமது
வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை
ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர்
கான்றிடு கதிர் மதி இரண்டு போன்றவே

விளக்கவுரை :


939. அழல் அம் பூ நறவார்ந்து அழல் ஊர் தரச்
சுழலும் கண்ணினன் சோர்தரும் மாலையன்
கழலன் காழகம் வீக்கிய கச்சையன்
மழலைச் சொற்களின் வைது இவை கூறினான்

விளக்கவுரை :

940. புடைத்து என் நாயினைப் பொன்றுவித்தீர் உயிர்
கடுக்கப் பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின்
தடக்கை மீளிமை தாங்குமின் அன்று எனின்
உடைப்பென் கள்குடம் என்று உரையாடினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books