சீவக சிந்தாமணி 711 - 715 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 711 - 715 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

711. நலத்தை மத்து ஆக நாட்டி நல்வலி இளமை வாராக்
குலப் பிறப்பு என்னும் கையால் கோலப் பாசம் கொளுத்திக்
கலக்கி இன் காமம் பொங்கக் கடைந்திடுகின்ற காளை
இலைப்பொலி அலங்கல் மார்பம் இயைவது என்று ஆகும் கொல்லோ

விளக்கவுரை :

712. தீங் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன்
நாம் கணால் பருகியிட்டு நலன் உணப்பட்ட நம்பி
பூங் குழல் மகளிர் முன்னர்ப் புலம்பல் நீ நெஞ்சே என்றாள்
வீங்கிய காமம் வென்றார் விளைத்த இன்பத்தோடு ஒப்பாள்

விளக்கவுரை :

[ads-post]

713. கண் எனும் வலையின் உள்ளான் கை அகப்பட்டு இருந்தான்
பெண் எனும் உழலை பாயும் பெருவனப்பு உடைய நம்பி
எண்ணின் மற்று யாவன் ஆம் கொல் என் இதில் படுத்த ஏந்தல்
ஒண்ணிற உருவச் செந்தீ உருவுகொண்ட அனைய வேலான்

விளக்கவுரை :


714. யாவனே யானும் ஆக அருநிறைக் கதவம் நீக்கிக்
காவல் என் நெஞ்சம் என்னும் கன்னி மாடம் புகுந்து
நோவ என் உள்ளம் யாத்தாய் நின்னையும் மாலை யாலே
தேவரின் செறிய யாப்பன் சிறிது இடைப்படுக என்றான்

விளக்கவுரை :

715. கழித்த வேல் ஏறு பெற்ற கடத்து இடைப் பிணையின் மாழ்கி
விழித்து வெய்துயிர்த்து மெல்ல நடுங்கித் தன்தோழி கூந்தல்
இழுக்கி வண்டு இரியச் சேர்ந்து ஓர் கொடிப் புல்லும் கொடியின் புல்லி
எழில்தகை மார்பற்கு இன் யாழ் இது உய்த்துக் கொடுமோ என்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books