சீவக சிந்தாமணி 866 - 870 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 866 - 870 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

866. பூக்கள் நீர் விளை யாடிய பொன் உலகு
ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து ஒய் என
வீக்க மா நகர் வீழ்ந்தது போன்று அவண்
மாக்கள் மாக்கடல் வெள்ளம் அடுத்ததே

விளக்கவுரை :

867. மின்னு வாள்தடம் கண்ணியர் வெம் முலைத்
துன்னு வாட்டம் தணித்தலின் தூ நிறத்து
அன்ன வாட்டத்து அணி மலர்ப் பூம் பொழில்
என்ன வாட்டமும் இன்றிச் சென்று எய்தினார்

விளக்கவுரை :

[ads-post]

868. அள் உடைக் குவளைக் கயம் நீடிய
கள் உடைக் கழுநீர்ப் புனல் பட்டமும்
புள் உடைக் கனியின் பொலி சோலையும்
உள் உடைப் பொலிவிற்று ஒரு பால் எல்லாம்

விளக்கவுரை :

869. செம்புறக் கனி வாழையும் தேன்சொரி
கொம்பு உறப் பழுத்திட்டன கோழரை
வம்புறக் கனிமாத் தொடு வார் சுளைப்
பைம் புறப் பலவிற்று ஒருபால் எல்லாம்

விளக்கவுரை :

870. கள்ள வானரமும் கன்னி யூகமும்
துள்ளும் மானொடு வேழத் தொகுதியும்
வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து அவண்
உள்ளும் மாந்தரை உள்ளம் புகற்றுமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books