சீவக சிந்தாமணி 706 - 710 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 706 - 710 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

706. முருகு விம்மு கோதையார் மொய் அலங்கல் வண்டு போல்
பருகுவான் இவள் நலம் பாரித்திட்ட இந்நகர்
உருகும் ஐங்கணை ஒழித்து உருவின் ஐய காமனார்
கருதி வந்தது என்று தம் கண்கள் கொண்டு நோக்கினார்

விளக்கவுரை :

707. முனைத் திறத்து மிக்க சீர் முனைவர் தம் முனைவனார்
வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்கு இனியனா
நினைத்து இருந்து இயற்றிய நிருமித மகனிவன்
கனைத்து வண்டு உளர்ந்த தார்க் காளை சீவகன் அரோ

விளக்கவுரை :


[ads-post]

708. பொன்னை விட்ட சாயலாள் புணர் முலைத் தடத்தினால்
மின்னை விட்டு இலங்கு பூண் விரை செய் மார்பம் ஓலையா
என்னை பட்டவாறு அரோ எழுதி நங்கை ஆட் கொள்வான்
மன்னும் வந்து பட்டனன் மணி செய் வீணை வாரியே

விளக்கவுரை :

709. இனைய கூறி மற்று அவள் தோழிமாரும் இன்புற
வனையலாம் படித்து அலா வடிவிற்கு எல்லை ஆகிய
கனை வண்டு ஓதி கை தொழும் கடவுள் கண்ணில் கண்டவர்
எனையது எனையது எய்தினார் அனையது அனையது ஆயினார்

விளக்கவுரை :

710. குட்ட நீர்க் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றாக்
கட்டழகு அமைந்த கண்ணாள் நிறை எனும் சிறையைக் கைபோய்
இட்ட நாண் வேலி உந்திக் கடல் என எழுந்த வேட்கை
விட்டுஎரி கொளுவ நின்றாள் எரி உறு மெழுகின் நின்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books