சீவக சிந்தாமணி 806 - 810 of 3145 பாடல்கள்
806. கடாம் திறந்திட்டு வானின் களகள முழங்கும் வேழம்
படாம் திறந்து ஊழித் தீயின் பதுமுகன் காட்டியிட்டான்
தடாம் பிறை மருப்புத் திண்கை அபர காத்திரங்கள் தம்மால்
கொடாம் பிற குமரிப் போருள் பிறர்க்கு எனக் கொன்றது அன்றே
விளக்கவுரை :
807. மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலில் சீறா
முருக்கித் தேர் தடக்கை தன்னால் முழங்கிப் பாய் மாக்கள் காலின்
நெரித்திடாக் கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர்
ஒருக்கிப் பேய் பாடி ஆட உறுசிலை உடன்று கொண்டான்
விளக்கவுரை :
[ads-post]
808. கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால் குனிந்தது
ஒண் தேர் மிசையும் உருவக் களிற்று உச்சி மேலும்
வண் தார்ப் புரவி நிறுத்தும் மற மன்னர் மேலும்
கண்டான் சொரிந்தான் கணை மாரி கலந்தது அன்றே
விளக்கவுரை :
809. பைம் பொன் புளகப் பருமக் களியானை ஈட்டம்
செம் பொன் நெடுந் தேர்த் தொகை மாக் கடல் சேனை வெள்ளம்
நம்பன் சிலை வாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால்
அம்பொன் மணிப் பூண் அரசும் இலை என்று நக்கான்
விளக்கவுரை :
810. ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான்
அருவரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும்
பொருவரோ மன்னர் என்றான் பொருசிலை மடக்கி இட்டார்
வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கிக் கொண்டார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 806 - 810 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books