சீவக சிந்தாமணி 956 - 960 of 3145 பாடல்கள்
956. என்று அவன் உரைப்பக் கேட்டே இமயமும் நிகர்க்கல் ஆற்றாப்
பொன் தரு மாரி வண்கைப் புரவலன் புகன்று நோக்கி
வென்றவர் உலகம் பெற்ற வேந்து உடை இன்பம் எல்லாம்
இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் எரி உமிழ்ந்து இலங்கும் வேலான்
விளக்கவுரை :
957. சூடுறு கழலினாற்குச் சுதஞ்சணன் இதனைச் சொன்னான்
பாடல் வண்டு அரற்றும் பிண்டிப் பகவனது இறைமை போல
மூடி இவ் உலகம் எல்லாம் நின் அடித் தருவல் இன்னே
ஆடியுள் பாவை போல் நீ அணங்கியது அணங்க என்றான்
விளக்கவுரை :
[ads-post]
958. வாளொடு வயவர் ஈண்டி வாரணத் தொழுவின் முற்றி
மீளிமை செய்யின் வெய்ய நண்ப நின் நினைப்பது அல்லால்
நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்தல் இல்லாக்
கோள் உடைக் கிழமை ஒப்பாய் குறைவு இலன் பிறவின் என்றான்
விளக்கவுரை :
959. இன் நிழல் இவரும் பூணான் இரு விசும்பு இவர்தல் உற்றுப்
பொன் எழு அனைய தோளான் புல்லிக் கொண்டு இனைய கூறி
நின் நிழல் போல நீங்கேன் இடர் வரின் நினைக்க என்று
மின் எழூஉப் பறப்பது ஒத்து விசும்பு இவர்ந்து அமரன் சென்றான்
விளக்கவுரை :
960. சொல்லிய நன்மை இல்லாச் சுணங்கன் இவ் உடம்பு நீங்கி
எல் ஒளித் தேவன் ஆகிப் பிறக்குமோ என்ன வேண்டா
கொல் உலை அகத்து இட்டு ஊதிக் கூர் இரும்பு இரதம் குத்த
எல்லை இல் செம் பொன் ஆகி எரி நிறம் பெற்றது அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 956 - 960 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books