சீவக சிந்தாமணி 831 - 835 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 831 - 835 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

831. உடுப்பன துகில்களும் உரைக்கும் நானமும்
தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும்
கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல் கலம்
அடுத்து விண் பூத்தது ஓர் அழகின் மிக்கதே

விளக்கவுரை :

832. இலங்கு பொன் கிண் கிணி இரங்கும் ஓசையும்
உலம்பு மால் உவர்க் கடல் ஒலியின் மிக்கவே
கலம் கழும் அரவமும் கருனை ஆக்குவார்
சிலம்பு ஒலி அரவமும் மிச்சில் சீப்பவர்

விளக்கவுரை :

[ads-post]

833. மூழி வாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும்
ஊழி வாய்த் தீயொடு ஒக்கும் ஒளிறு வாள் தடக்கையானும்
ஆழிவாய் விரலில் காமன் அம்பொடு சிலை கை ஏந்தத்
தாழி வாய்க் குவளை வாள் கண் தையலார் பரவச் சார்ந்தார்

விளக்கவுரை :


834. இன்னியம் முழங்கி ஆர்ப்ப ஈண்டு எரி திகழ வேதம்
துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப
மின் இயல் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்து எழ முருகன் அன்னான்

விளக்கவுரை :

835. இட்ட உத்தரியம் மின்னும் எரிமணிப் பருமுத்து ஆரம்
மட்டு அவிழ் கோதை வெய்ய வருமுலை தாங்கல் ஆற்றா
நெட்டு இரும் கூந்தலாள் தன் நேர்வளை முன்கை பற்றிக்
கட்டு அழல் வலம் கொண்டு ஆய் பொன்கட்டில் தான் ஏறினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books