சீவக சிந்தாமணி 911 - 915 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 911 - 915 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

911. ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என
மாசை மாக் கடல் மன்னவன் ஆடலின்
மீசை நீள் விசும்பில் தலைச் சென்றது ஓர்
ஓசையால் சனம் ஒள்நிதி உண்டதே

விளக்கவுரை :


912. மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய
சிகரச் செவ்வரைத் தீ நிறப் பொன் எயில்
நிகர் இல் நேமிதன் நீள் நகர்க்கு ஆகு எனா
நகரம் நால் இரு கோடி நயந்ததே

விளக்கவுரை :


[ads-post]

913. உவா முதல் இரவலர்க்கு உடைமை உய்த்தவர்
கவான் முதல் கூப்பிய கனக மாழையால்
தவா வினை அடை கரை தயங்கு சிந்தை நீர்
அவா எனும் உடை கடல் அடைக்கப் பட்டதே

விளக்கவுரை :


914. சீர் அரவச் சிலம்பு ஏந்தும் மென் சீறடி
யார் அரவக் கழல் ஆடவ ரோடும்
போர் அரவக் களம் போன்று பொன்னார் புனல்
நீர் அரவம் விளைத்தார் நிகர் இல்லார்

விளக்கவுரை :


915. கார் விளையாடிய மின் அனையார் கதிர்
வார் விளையாடிய மென் முலை மைந்தர்
தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய
நீர் விளையாட்டு அணி நின்றதை அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books