சீவக சிந்தாமணி 851 - 855 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 851 - 855 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

குணமாலையார் இலம்பகம்


851. காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
மாசு அறு விசும்பின் வெய்யோன் வடதிசை அயணம் முன்னி
ஆசு அற நடக்கும் நாளுள் ஐங் கணைக் கிழவன் வைகிப்
பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவம் செய்தான்

விளக்கவுரை :

852. தோடு அணி மகளிர் போன்ற துணர் மலர்க் கொம்பர் கொம்பின்
ஆடவர் போல வண்டும் அடைந்தன அளியிற்கு ஒல்கி
ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும்
சேடரின் சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய தும்பி

விளக்கவுரை :

[ads-post]

853. நானம் மண்ணிய நல் மண மங்கையர்
மேனி போன்று இனிதாய் விரை நாறிய
கானம் காழ் அகிலே கமழ் கண்ணிய
வேனிலாற்கு விருந்து எதிர் கொண்டதே

விளக்கவுரை :

854. கொம்பர் இன் குயில் கூய்க் குடை வாவியுள்
தும்பி வண்டொடு தூ வழி யாழ் செய
வெம்பு வேட்கை விரும்பிய வேனில் வந்து
உம்பர் நீள் துறக்கத்து இயல்பு ஒத்ததே

விளக்கவுரை :


855. நாக நண் மலர் நாறு கடிநகர்
ஏக இன்பத்து இராச புரத்தவர்
மாகம் நந்து மணம் கமழ் யாற்று அயல்
போகம் மேவினர் பூமரக் காவினே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books