சீவக சிந்தாமணி 796 - 800 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 796 - 800 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

796. அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆர் உயிர் மேயும் நேமி
முகில் கொண்ட மின்னுத் தோற்ப முறுகிய விசை இற்றாகி
மிகல் கொண்ட இகலைத் தானே விழுங்கிய சிறகர்த் தோற்றிப்
பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை தன் பைம்பொன் தேரே

விளக்கவுரை :

797. கால் அற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சம்
மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்ற வில் ஞாண்
மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல்
கோல் ஒற்றக் குனிந்த வாறே சிலை குனிந்து ஒழிந்தது அன்றே

விளக்கவுரை :

[ads-post]

798. நுங்களை வீணை வென்ற நூபுர அடியினாள் தன்
வெம் களித் தடங்கண் கண்டீர் விருந்து எதிர் கொள்மின் என்னா
அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆகச்
செம் களிப் பகழி ஒப்பித்து உள்ளவாறு ஊட்டினானே

விளக்கவுரை :


799. நன் மன வேந்தர் தங்கள் நகை மணி மார்பம் நக்கிப்
புன் மன வேந்தர் தங்கள் பொன் அணி கவசம் கீறி
இன் உயிர் கவர்ந்து தீமை இனிக் கொள்ளும் உடம்பினாலும்
துன்னன்மின் என்பவே போல் சுடுசரம் பரந்த அன்றே

விளக்கவுரை :


800. மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற
தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம்
மான் நெறி காட்டும் திண்தேர் கயிறு அற்று மறிய வேந்தர்
ஊன் எறி ஆழி ஏந்தி ஒய் என உலம்பி ஆர்த்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books