சீவக சிந்தாமணி 731 - 735 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 731 - 735 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

731. கோதை புறம் தாழக் குண்டலமும் பொன் தோடும்
காதின் ஒளிர்ந்து இலங்கக் காமர் நுதல் வியர்ப்ப
மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுர
கீதம் கிடை இலாள் பாடத் தொடங்கினாள்

விளக்கவுரை :


732. இலையார் எரிமணிப் பூண் ஏந்து முலையும்
சிலையார் திருநுதலும் செம் பசலை மூழ்க
மலையார் இலங்கு அருவி வாள் போல மின்னும்
கலையார் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர்

விளக்கவுரை :


[ads-post]

733. பிறையார் திருநுதலும் பேரமர் உண் கண்ணும்
பொறையார் வன முலையும் பூம் பசலை மூழ்க
நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும்
கறைவேல் உண் கண்ணினாய் காணார் கொல் கேள்வர்

விளக்கவுரை :

734. அரும்பு ஏர் வன முலையும் ஆடு அமை மென் தோளும்
திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க
நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும்
கரும்பார் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர்

விளக்கவுரை :

735. பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளைக் கை
மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா
விண் நின்று இயங்கி மிடறு நடு நடுங்கி
எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books