சீவக சிந்தாமணி 886 - 890 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 886 - 890 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

886. ஐயனே அறியும் என வந்தனம்
பொய் அது அன்றிப் புலமை நுணுக்கி நீ
நொய்தில் தேர்ந்து உரை நூல் கடல் என்று தம்
கையினால் தொழுதார் கமழ் கோதையார்

விளக்கவுரை :

887. நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது
அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல்
புல்லு கோடைய பொற்பு உடைப் பூஞ் சுண்ணம்
அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே

விளக்கவுரை :

[ads-post]

888. வாரம் பட்டுழித் தீயவும் நல்ல ஆம்
தீரக் காய்ந்துழி நல்லவும் தீய ஆம்
ஓரும் வையத்து இயற்கை அன்றோ எனா
வீர வேல் நெடும் கண்ணி விளம்பினாள்

விளக்கவுரை :


889. உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால்
வள்ளல் நீங்கப் பெறாய் வளைத்தேன் எனக்
கள் செய் கோதையினாய் கரி போக்கினால்
தௌளி நெஞ்சில் தெளிக எனச் செப்பினான்

விளக்கவுரை :

890. கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும்
எண்ணின் நின் சொல் இகந்து அறிவார் இலை
நண்ணு தீம்சொல் நவின்ற புள் ஆதியா
அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books