சீவக சிந்தாமணி 861 - 865 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 861 - 865 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

861. திருந்து சாமரை வீசுவ தெண் கடல்
முரிந்த மொய் திரை போன்ற அகில் புகை
புரிந்த தாமங்கள் ஆக அப் பூந்துகள்
விரிந்து வானின் விதானித்தது ஒத்ததே

விளக்கவுரை :

862. சோலை சூழ் வரைத் தூங்கு அருவித் திரள்
மாலை ஊர்திகள் வையம் இவற்று இடைச்
சீலக்கு அஞ்சி நல் போதகம் செல்வன
நீல மேகம் நிரைத்தன போன்றவே

விளக்கவுரை :

[ads-post]

863. வழங்கு வங்கக் கலிங்கக் கடகமும்
அழுங்கும் மாந்தர்க்கு அணிகலப் பேழையும்
தழங்கு வெம் மதுத் தண்டும் தலைத் தலைக்
குழங்கல் மாலையும் கொண்டு விரைந்தவே

விளக்கவுரை :

864. வாச வெண்ணெயும் வண்டு இமிர் சாந்தமும்
பூசு சுண்ணமும் உண்ணும் அடிசிலும்
காசு இல்போகக் கலப்பையும் கொண்டு அவண்
மாசு இல் மாசனம் வாயில் மடுத்தவே

விளக்கவுரை :

865. பாடல் ஓசையும் பண் ஒலி ஓசையும்
ஆடல் ஓசையும் ஆர்ப்பு ஒலி ஓசையும்
ஓடை யானை உரற்று ஒலி ஓசையும்
ஊடு போய் உயர் வான் உலகு உற்றவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books