சீவக சிந்தாமணி 741 - 745 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 741 - 745 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

741. வெள் இலை வேல் கணாளைச் சீவகன் வீணை வென்றான்
ஒள்ளியன் என்று மாந்தர் உவாக் கடல் மெலிய ஆர்ப்பக்
கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்
உள்ளகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம்

விளக்கவுரை :

742. வடதிசைக் குன்றம் அன்ன வான் குலம் மாசு செய்தீர்
விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர்
வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல்
முடி துறந்து அளியிர் போகி முனிவனம் புகுமின் என்றான்

விளக்கவுரை :

[ads-post]

743. மல்லுப் பூத்து அகன்ற மார்பீர் புகழ் எனும் போர்வை போர்த்துச்
செல்வப் பூ மகளும் நாளை அவன் உழைச் செல்லும் என்றான்
முல்லைப் பூம் பந்து தன்னை மும்மதக் களிற்று வேலிக்
கொல்லைப் பூங் குன்றம் செய்தீர் குங்குமக் குழங்கல் மாலை

விளக்கவுரை :

744. திருமகள் இவளைச் சேர்ந்தான் தெண் திரை ஆடை வேலி
இரு நில மகட்கும் செம்பொன் நேமிக்கும் இறைவன் ஆகும்
செரு நிலத்து இவனை வென்றீர் திருவினுக்கு உரியீர் என்றான்
கரு மனம் நச்சு வெம் சொல் கட்டியங் காரன் அன்றே

விளக்கவுரை :

745. அனிச்சப் பூங் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சிப்
பனிக்கும் நுண் நுசுப்பின் பாவை ஒருத்தி நாம் பலர் என்று எண்ணித்
துனித்து நீர் துளங்கல் வேண்டாம் தூமணிச் சிவிறி நீர் தூய்த்
தனிக் கயத்து உழக்கி வென்றீர் தையலைச் சார்மின் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books