சீவக சிந்தாமணி 736 - 740 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 736 - 740 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

736. மையார் நெடுங் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து
நையா நடு நடுங்கா நனி நாணம் மீது ஊராப்
பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன்மாலை
பெய் பூங் கழலாற்குப் பெண் அரசி ஏந்தினளே

விளக்கவுரை :


737. மெல் என்று சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ
நல்ல பெடையன்னம் நாண அடி ஒதுங்கி
ஒல்லென் உயர்தவமே செய்ம்மின் உலகத்தீர்
எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே

விளக்கவுரை :


[ads-post]

738. நாகத்துப் படம் கொள் அல்குல் நலம் கிளர் செம்பொன் மாலை
மேகத்துப் பிறந்தது ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல்
ஆகத்துப் பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள்
போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்தது ஒப்பாள்

விளக்கவுரை :

739. செம்மலர் அடியும் நோக்கித் திருமணி அல்குல் நோக்கி
வெம் முலைத் தடமும் நோக்கி விரிமதி முகமும் நோக்கி
விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல ஆகி
மைம்மலர்த் தடங் கண் நங்கை மரைமலர்த் தேவி என்றான்

விளக்கவுரை :

740. கோதையும் தோடும் மின்னக் குண்டலம் திருவில் வீச
மாதரம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்பக்
காதல் அம் தோழி மார்கள் கருங் கயல் கண்ணினாளை
ஏதம் ஒன்று இன்றிப் பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books