சீவக சிந்தாமணி 941 - 945 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 941 - 945 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

941. நல் வினை ஒன்றும் இலாதவன் நான் மறை
வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே
செல்சுடர் வேல் வல சீவக சாமி சென்று
அல்லல் அகற்றி அருந்துயர் தீர்த்தான்

விளக்கவுரை :


942. மீண்டு அவர் ஏகுதலும் விடை அன்னவன்
ஈண்டிய தோழரோடு எய்தினன் ஆகி
மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது
காண்டலும் கட்கு இனியான் கலுழ்ந்திட்டான்

விளக்கவுரை :


[ads-post]

943. நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளிக்
காய் கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வது ஓர்
சேய் உடம்பு எய்துவை செல்கதி மந்திரம்
நீ உடம்பட்டு நினைமதி என்றான்

விளக்கவுரை :

944. என்றலும் தன் செவியோர்த்து இரு கண்களும்
சென்று உகு நீரொடு செம்மலை நோக்கி
ஒன்றுபு வால் குழைத்து உள் உவப்பு எய்தலும்
குன்று அனையான் பதம் கூற வலித்தான்

விளக்கவுரை :


945. நல் செய்கை ஒன்றும் இல்லார் நாள் உலக்கின்ற போழ்தின்
முன் செய்த வினையின் நீங்கி நல்வினை விளைக்கும் வித்து
மல் செய்து வீங்கு தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ
தன் செய்கை தளிர்ப்பத் தாழ்ந்து ஆங்கு அதன் செவிச் செப்புகின்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books