சீவக சிந்தாமணி 786 - 790 of 3145 பாடல்கள்
786. கூட்டு உற முறுக்கி விட்ட குய மகன் திகிரி போல
வாள் திறல் தேவ தத்தன் கலின மா மாலை வெள்வேல்
ஈட்டம் போழ்ந்து யானை நெற்றி இரும் குளம்பு அழுத்தி மன்னர்
சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தித் திரியும் அன்றே
விளக்கவுரை :
787. பாய்ந்தது கலின மாவோ பறவையோ என்ன உட்கி
வேந்தர்தம் வயிறு வேவ நபுல மாவிபுலர் என்பார்
காய்ந்து தம் புரவிக் காமர் குளம்பினால் களிற்றின் ஓடை
தேய்ந்து உகச் சேர்த்தி மாலைத் திருமுடித் திலகம் கொண்டார்
விளக்கவுரை :
[ads-post]
788. காயத்தின் குழம்பு தீற்றிக் கார் இரும்பு எறிய மேகம்
தோயும் முள் இலவின் கூன் காய் சினை தொறும்உதிர்வவே போல்
மாயம் கொல் மறவர் மாலைப் பைந்தலை உதிர்ந்த செங் கண்
சேய் அனான் திருவின் பேரான் செழுஞ் சிலைப் பகழியாலே
விளக்கவுரை :
789. நீல் நிறப் பௌவம் மேய்ந்து சூல் முற்றி நீல மேகம்
வால் நிற விசும்பின் நின்ற மாரியின் மறை வலாளன்
போன் நிறப் புத்தி சேனன் பொன் அணி பகழி சிந்தி
வேல் நிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான்
விளக்கவுரை :
790. வீர வேல் உடம்பு எலாம் சூழ வெம் புலால்
சோரும் செங்குருதியுள் மைந்தர் தோன்றுவார்
ஒருமேல் ஒண்மணிச் சூட்டு வைக்கிய
ஆரமே அமைந்த தேர்க் குழிசி ஆயினார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 786 - 790 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books