சீவக சிந்தாமணி 721 - 725 of 3145 பாடல்கள்
721. தீந் தொடை நரம்பின் தீமை சிறிது அலாப் பொழுதும் ஓதிப்
பூந் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்டத்
தேங் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன்
வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான்
விளக்கவுரை :
722. பணிவரும் பைம் பொன் பத்தர் பல்வினைப் பவள ஆணி
மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீம்தேன்
அணிபெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல்யாழ்
கணிபுகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கல் உற்றான்
விளக்கவுரை :
[ads-post]
723. குரல் குரல் ஆகப் பண்ணிக் கோதை தாழ் குஞ்சியான் தன்
விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு எனத் தெரிதல் தேற்றார்
சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும்
உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇப் பாடுகின்றான்
விளக்கவுரை :
724. கன்னி நாகம் கலங்க மலங்கி
மின்னும் இரங்கும் மழை என்கோ யான்
மின்னும் மழையின் மெலியும் அரிவை
பொன் நாண் பொருத முலை என்கோ யான்
விளக்கவுரை :
725. கருவி வானம் கான்ற புயலின்
அருவி அரற்றும் மலை என்கோ யான்
அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும்
மருவார் சாயல் மனம் என்கோ யான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 721 - 725 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books