சீவக சிந்தாமணி 921 - 925 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 921 - 925 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

921. தூமம் கமழும் கோதை தொடுத்த துயரி முலையாத்
தே மென் கீதம் பாலாச் சுரந்து திறத்தின் ஊட்டிக்
காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலுள் நீங்கிப்
பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்மின் இனிதே

விளக்கவுரை :

922. கடல் அம் பவளம் மணையில் கன பொன் கயிற்றில் காய்பொன்
மடல் அம் கமுகின் ஊசல் மடந்தை ஆட நுடங்கி
நடலை நடுவின் மகளிர் நூக்கப் பரிந்த காசு
விடலில் விசும்பின் மின் போல் மின்னி வீழ்வ காண்மின்

விளக்கவுரை :

[ads-post]

923. நான நீரில் கலந்து நலம் கொள் பூம் பட்டு ஒளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப் பட்டதற்கு நாணி
மான மகளிர் போல மணி மேகலைகள் பேசாத்
தானம் தழுவிக் கிடப்பச் செல்வோள் தன்மை காண்மின்

விளக்கவுரை :

924. தீம்பால் பசியின் இருந்த செவ்வாய்ச் சிறு பைங் கிளி தன்
ஓம்பு தாய் நீர் குடைய ஒழிக்கும் வண்ணம் நாடிப்
பாம்பால் என்ன வெருவிப் பைம்பொன் தோடு கழலக்
காம்பு ஏர் தோளி நடுங்கிக் கரை சேர்பவளைக் காண்மின்

விளக்கவுரை :


925. துணை இல் தோகை மஞ்ஞை ஈயற்கு இவரும் வகை போல்
மணி ஆர் வளை சேர் முன்கை வலனும் இடனும் போக்கி
இணை இல் தோழிமார்கள் இறுமால் இடை என்று இரங்க
அணி ஆர் கோதை பூம்பந்து ஆடும் அவளைக் காண்மின்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books