சீவக சிந்தாமணி 981 - 985 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 981 - 985 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

981. கூற்று என முழங்கிக் கையால் கோட்டு இடைப் புடைப்பக் காய்ந்து
காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி
ஆற்றல் அம் குமரன் தன் மேல் அடு களிறு ஓட அஞ்சான்
கோல் தொடிப் பாவை தன்னைக் கொண்டு உயப் போமின் என்றான்

விளக்கவுரை :


982. மதியினுக்கு இவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே
பதி அமை பருதி தன் மேல் படம் விரித்து ஓடி ஆங்குப்
பொதி அவிழ் கோதை தன் மேல் பொருகளிறு அகன்று பொன்தார்க்
கதி அமை தோளினானை கையகப் படுத்தது அன்றே

விளக்கவுரை :

[ads-post]

983. கையகப் படுத்தலோடும் கார்மழை மின்னின் நொய்தா
மொய் கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பு இடைக் குளித்துக் கால்கீழ்
ஐயென அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்பச்
செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே

விளக்கவுரை :

984. மல்லல் நீர் மணி வண்ணனைப் பண்டு ஓர் நாள்
கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அச்
செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல்
பில்கும் மும்மத வேழம் பெயர்ந்ததே

விளக்கவுரை :

985. ஒரு கை இரு மருப்பின் மும் மதத்தது ஓங்கு எழில் குன்று அனைய வேழம்
திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இளையாட்கு உடைந்து தேனார்
முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கும் மார்பினன் ஐந்நூற்று நால்வர்
அருகு கழல் பரவத் தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books