சீவக சிந்தாமணி 991 - 995 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 991 - 995 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

991. கம்மப் பல் கலம் களைந்து கண்டு தெறூஉம்
விம்மப் பல்கலம் நொய்ய மெய் அணிந்து
அம் மென் மாலையும் அடைச்சி குங்குமம்
கொம்மை மட்டித்தார் கொடி அனாளையே

விளக்கவுரை :


992. அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம்
கொம்பின் அவ்வையைக் கொணர்மின் சென்று எனப்
பைம் பொன் அல்குலைப் பயிரும் பைங்கிளி
செம்பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள்

விளக்கவுரை :


[ads-post]

993. நிறத்து எறிந்து பறித்த நிணம் கொள் வேல்
திறத்தை வெளவிய சேய் அரிக் கண்ணினாள்
பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம்
வெறுத்து யாவையும் மேவலள் ஆயினாள்

விளக்கவுரை :


994. குமரி மா நகர்க் கோதை அம் கொம்பு அனாள்
தமரின் நீங்கிய செவ்வியுள் தாமரை
அமரர் மேவரத் தோன்றிய அண்ணல் போல்
குமரன் ஆக்கிய காதலின் கூறினாள்

விளக்கவுரை :


995. கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா
முலைத் தடத்து இடை மொய் எருக் குப்பையா
இலக்கம் என் உயிரா எய்து கற்குமால்
அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையான் அரோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books