சீவக சிந்தாமணி 746 - 750 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 746 - 750 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

746. வெம் திறலாளன் கூற வேகமோடு உரறி மன்னர்
பந்தணி விரலினாள் தன் படா முலைப் போகம் வேண்டிக்
கந்து எனத் திரண்ட திண் தோள் கந்துகன் சிறுவன் காயும்
ஐந்தலை அரவின் சீற்றத்து ஆர் அழல் குளிக்கல் உற்றார்

விளக்கவுரை :

747. பண்ணியல் யானை மேலான் பது முகன் பரவைத் தானை
கண்ணியது உணர்ந்து கல்லாக் கட்டியங் காரன் நெஞ்சில்
எண்ணியது எண்ணி மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில்
தண்ணிய சிறிய வெய்ய தழல் சொலால் சாற்று கின்றான்

விளக்கவுரை :

[ads-post]

748. இசையினில் இவட்குத் தோற்றாம் யானையால் வேறும் என்னின்
இசைவது ஒன்று அன்று கண்டீர் இதனை யான் இரந்து சொன்னேன்
வசை உடைத்து அரசர்க்கு எல்லாம் வழிமுறை வந்தவாறே
திசை முகம் படர்க வல்லே தீத் தொட்டால் சுடுவது அன்றே

விளக்கவுரை :


749. தோளினால் மிடைந்து புல்லும் தொண்டைவாய் அமிர்தம் வேட்டோர்
வாளினால் மலைந்து கொள்ளின் வாழ்க நும் கலையும் மாதோ
கோள் உலாம் சிங்கம் அன்னான் கொடியினை எய்தப் பெற்றீர்
தாளினால் நொய்யீராகித் தரணிதாம் விடுமின் என்றான்

விளக்கவுரை :


750. நாறும் மும் மதத்தினாலே நாகத்தை இரிக்கும் நாகம்
ஆறிய சினத்தது அன்றி அதிங்கத்தின் கவளம் கொண்டால்
வேறு நீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்கல் ஆகாது
ஊறித் தேன் ஒழுகும் கோதை நம்பிக்கும் அன்னள் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books