சீவக சிந்தாமணி 811 - 815 of 3145 பாடல்கள்
811. செங்கண் மால் தெழிக்கப் பட்ட வலம்புரித் துருவம் கொண்ட
சங்குவாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி
பொங்கிய முழக்கில் வேழப் பேரினம் புலம்பினால் போல்
தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே
விளக்கவுரை :
812. அருவரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று
கருவரை குடையப் பட்ட கடல் எனக் கலங்கி வேந்தர்
திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே முருகன் தான் என்று
ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார்
விளக்கவுரை :
[ads-post]
813. முளி மரக்காடு மேய்ந்த முழங்கல் போன்று மைந்தன்
தெளி நலக் குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி
ஒளி நலம் உப்புக் குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல்
களி நல மன்னர் தங்கள் கடல் படை உடைந்தது அன்றே
விளக்கவுரை :
814. உறுபடை மன்னர் தம்மை உடற்றி ஒன்றானும் இன்றிச்
சிறுபடையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா
செறி எயிற்று ஆளி வேழப் பேரினம் செகுத்தது அன்றே
உறுபுலி ஒன்றுதானே கலை இனம் உடற்றிற்று அன்றே
விளக்கவுரை :
815. நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா
அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா
வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம்
இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 811 - 815 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books