சீவக சிந்தாமணி 701 - 705 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 701 - 705 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

701. விடுகணை விசையின் வெய்ய விளங்கு ஒளி இவுளித் திண்தேர்
கடு நடைக் கவரி நெற்றிக் கால் இயல் புரவி காய்ந்து
வடி நுனை ஒளிறும் மாலை வாள்படை மறவர் சூழ
அடுதிரைச் சங்கம் ஆர்ப்ப அணி நகர் முன்னினானே

விளக்கவுரை :


702. தோற்றனள் மடந்தை நல்யாழ் தோன்றலுக்கு என்று நிற்பார்
நோற்றனள் நங்கை மைந்தன் இள நலம் நுகர்தற்கு என்பார்
கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன
ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணும் ஆயினாரே

விளக்கவுரை :

[ads-post]

703. சுறா நிறக் கொடுங் குழை சுழன்று எருத்து அலைத்தர
அறா மலர்த் தெரியலான் அழன்று நோக்கி ஐ எனப்
பொறா மனப் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால்
அறாவி வந்து தோன்றினான் அனங்கன் அன்ன அண்ணலே

விளக்கவுரை :

704. குனி கொள்பாக வெண் மதிக் கூர் இரும்பு தான் உறீஇப்
பனி கொள் மால்வரை எனப் படு மதக் களிறு இரீஇ
இனிது இழிந்து இளையர் ஏத்த இன் அகில் கொழும் புகை
முனிய உண்ட குஞ்சியான் முரண் கொள் மாடம் முன்னினான்

விளக்கவுரை :

705. புதிதின் இட்ட பூந் தவிசின் உச்சிமேல் நடந்து அவண்
புதிதின் இட்ட மெல் அணைப் பொலிந்த வண்ணம் போகுஉயர்
மதியது ஏறி வெம் சுடர் வெம்மை நீங்க மன்னிய
உதயம் என்னும் மால்வரை உவந்து இருந்தது ஒத்ததே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books